நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள் நாய் கடித்தால் மரணம் நிகழுமா?...

x

நடந்து செல்லும்போதும் சரி...பைக்கில் போனாலும் சரி...பாரபட்சம் பார்க்காமல் மக்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன...

வீதிகளில் செல்லும் நாய்களால் தினம் தினம் பீதிக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்...

நாய் கடித்ததும் நம் மூளைக்குள் வரும் முதல் கேள்வி...ஒரு வேளை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருக்குமோ என்பது தான்...

ஆண்டுதோறும் நாய்க்கடியால் தமிழ்நாட்டில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனராம்...ஆனால் அவர்கள் அனைவருக்குமா ரேபிஸ் வருகிறது?...

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் ரேபிஸ் நோயால் 16 பேர் பரிதாபமாக மரணித்துள்ளனர்...

நாய் கடித்தால் ஏன் மரணம் வருகிறது?...இதோ உங்கள் கேள்விக்கான விடை...

அர்ஜுனன், மருத்துவர்

"கடிக்கும் நாய்க்கு ரேபிஸ் இருந்தால் கடிக்கும்போது நம் உடலுக்குள் போகும்"

"ரேபிஸ் நோயால் தான் மரணமே வருகிறது-குணப்படுத்துவது கடினம்"

ரேபிஸ் வந்தால் மரணம் கிட்டத்தட்ட உறுதியாகி விடும்...வந்த பின் புலம்புவதை விட வருமுன் காப்பது சாலச்சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்...

சாந்தினி, மருத்துவர்

"ரேபிஸ் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?"

"தடுப்பூசி செலுத்த வேண்டும்..."

"நோய் வந்த பிறகுதான் காப்பாற்றுவது கஷ்டம்"

"வரும் முன்னரே நம்மைக் காத்துக் கொள்ளலாம்

ஒரு சில இடங்களில் வளர்ப்பு நாய்களுக்கும் பெரும்பாலான இடங்களில் தெருநாய்களுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால் தான் மனிதர்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவுகிறது...

ஒரு சிலருக்கு நாயின் எச்சில் பட்டால் கூட ரேபிஸ் வந்து விடுமோ என்ற அச்சம் இருக்கும்...உங்கள் பயத்தைப் போக்கும் பதில் இதோ...

சரி...எதிர்பாராத விதமாக நாய் கடித்து விட்டது...உடனே என்ன செய்வது?...பயப்பட வேண்டிய அவசியமில்லை...நிதானமாக மருத்துவர் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்...

அர்ஜுனன், மருத்துவர்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதைப் போல் பார்க்க சில நாய்கள் மிகவும் சாதுவாக இருக்கும்...ஆனால் அதன் மனதுக்குள் என்ன தோன்றியதோ தெரியாது திடீரென ஆக்ரோஷமாக மாறிவிடும்... இதற்குப் பல காரணங்களை சொல்லலாம்...ஆனால் நாய்கள் கோபமாவதற்கு மிக முக்கியக் காரணம் என்ன தெரியுமா?...இதோ மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்...

"அசைவ உணவு தான் நாய்களை அதிக ஆக்ரோஷமாக்கும்"

"அசைவங்களை நாய்களுக்குப் போடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்"

விழிப்புணர்வு இல்லாதது தான் உயிர் பலிகளுக்குக் காரணம்...முறையான அறிவும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்