8 வயது சிறுவனை ஓட ஓட விரட்டி கடித்த தெருநாய்
சாலையில் சுற்றித் திரியும் நாய்களினால் ஏற்படும் விபரீதங்களின் பரபரப்பிற்கிடையேதான் சென்னை, தண்டயார் பேட்டையில் மனதை பதற வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது ...
(ப்ரீத்)
வீட்டை நோக்கி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த 8 வயது சிறுவனை, தெருநாய் ஒன்று ஓட ஓட விரட்டி தசைகள் கிழிந்து தொங்கும் அளவுக்கு கடித்து குதறியிருக்கிறது..
(ப்ரீத்) (ப்ளாக் அன்ட் வொயிட் ப்ரேமில் காண்பிக்கவும்)
படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிவதாகவும், இந்த விபரீத சம்பவம் முதல் முறை இல்லையெனவும் மக்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்...
(ப்ரீத்)
ராட்வீலர் போன்ற வளர்ப்பு நாய்கள் தொடங்கி, சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களால் சாமான்ய மக்களும், பச்சிளம் குழந்தைகளும் தாக்குதலுக்கு ஆளாகி சாகும் தருவாயில் சென்று பிழைத்த சம்பவங்கள் சென்னையில் பல...
இந்நிலையில், தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பிடிக்க வேண்டும் என சென்னை, தண்டையார் பேட்டை பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்..