7 மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்... சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவம் | Dog Attack
சென்னை வேளச்சேரியில், தெருநாய் கடித்ததில், 7 மாத குழந்தை உள்பட 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேளச்சேரி பார்க் அவென்யூ முதல் தெருவில் குழந்தைக்கு, ஒரு மூதாட்டி உணவு ஊட்டி வந்தபோது, கையில் வைத்திருந்த 7 மாத குழந்தையின் தொடையில் நாய் கடித்தது. அதேபோல, வேளச்சேரி சிறுவர் பூங்கா அருகில் விளையாடிக் கொன்டிருந்த 9 வயது சிறுவனையும் மற்றொரு தெருநாய் காலில் கடித்தது. 2 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story