"ரூ. 5 ஆயிரம் கோடிக்கு..- ஒரு கோடி..“ மருத்துவரை குறி வைத்து நடந்த மோசடி.. - தென்காசியில் அதிர்ச்சி
ஐந்தாயிரம் கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரபலமான எலும்பு மருத்துவராக ஜவன் சாமுவேல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு போன் செய்த அடையாளம் தெரியாத நபர்
ட்ராய் அமைப்பிலிருந்து பேசுவதாகக் கூறி இருக்கின்றனர். அதில் ஐந்தாயிரம் கோடி மோசடியில் ஜவன் சாமுவேல் உட்படப் பல மருத்துவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கூறி இருக்கின்றனர். இதனால் மருத்துவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகக் கூறி இருக்கின்றனர். இதனை யாரிடமும் சொல்லக்குகூடாது, அப்படியே அறையில் உட்கார்ந்து இருக்க வேண்டும் எனக் கூறி வீடியோ காலில் மிரட்டி இருக்கின்றனர்.மேலும் சிபிசிஐடி போலீசார் என்று காவல்துறையில் உடையில் தோன்றி மிரட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி மருத்துவரை ஜாமினில் விடுவதாகக் கூறி ஒரு சில ஆவணங்களை அனுப்பி இருக்கின்றனர். மேலும் இதற்குக் கட்டணமாக சுமார் ஒரு கோடியே ஐம்பதாயிரம் வாங்கியுள்ளனர். இறுதியில் இவையனைத்தும் மோசடி எனத் தெரிந்த மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மும்பையைச் சேர்ந்த அப்துல் மஜிது, முகம்மது ராஜா உட்பட 6 பேரைக் கைது செய்தனர்