அனல் மின்நிலைய விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்

x

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்து ஏற்பட்ட விபத்தில், வெங்கடேஷ் , பழனிசாமி என இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மேட்டூர் அனல் மின்நிலையம் முன்பாக போராட்டம் நடத்திய உறவினர்கள், முறையான நிவாரணம் அறிவிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளர்கள் உடலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும், அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் சார்பில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 17 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கி ஆறுதல் கூறினார். இறுதி சடங்குக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு சார்பில் உதவி தொகையாக 2 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்