செந்தில் பாலாஜி ஜாமீன் தீர்ப்பு..! அதிரடி உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம் | Senthil Balaji
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீன் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, கடுமையான நிபந்தனைகளுடன் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஜாமீன் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி போக்குவரத்துத்துறை லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்ட ஒ. பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி கூறிய தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதால் மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.