திமுக நிர்வாகியை சாதி சொல்லி திட்டிய திமுக ஒன்றியம்?

x

50 ஆயிரம் கமிஷனுக்காக, பாமகவை சேர்ந்தவருக்கு டிராக்டர் வழங்க பரிந்துரை செய்த திமுக ஒன்றிய செயலாளரை, தட்டிக்கேட்ட திமுக நிர்வாகியை, சாதி சொல்லி தகாத வார்த்தையால் பேசிய ஆடியோ, வலைதளத்தில் பரவி வருகிறது. முக்குளம் ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் பாமகவை சேர்ந்த ஒருவருக்கு டிராக்டர் வழங்க பரிந்துரை செய்து, காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கமிஷனாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதை திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு கண்டித்துள்ளார். திமுகவிற்கு எதிராக வேலை செய்த பாமகவினருக்கு கொடுக்கலாமா என கேள்வி எழுப்பினார். அப்போது, அவரை சாதி சொல்லி கிருஷ்ணன் இழிவாக பேசிய ஆடியோ, பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்