ஒரே நேரத்தில் வந்த திமுக, அதிமுக - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தொற்றிய பரபரப்பு
மதுரையில் வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரே நேரத்தில் மரியாதை செலுத்த வந்த திமுக மற்றும் அதிமுகவினர் தங்கள் தலைவர்கள் குறித்து மாறி மாறி கோஷங்கள் எழுப்பி கொண்டனர். பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மதிமுக சார்பில் துரை வைகோ மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். அப்போது இரு கட்சி தொண்டர்களும் மாறி மாறி தங்கள் தலைவர்கள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story