பெண் VAO-க்கு நடந்த சோகம் - அதிர்ச்சியில் அதிகாரிகள்
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த கனி என்பவர் பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வி.ஏ.ஓ கனி பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட சக அலுவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Next Story