60 அடி ஆழ கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம் - எட்டி பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி
60 அடி ஆழ கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம் - எட்டி பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே, தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார். முத்தம்மாள் என்ற 80 வயது மூதாட்டி, சேகர் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story