50 கிடாக்கள் பலியிட்டு ஆண்களுக்கு மட்டும் கறிவிருந்து - களைகட்டிய வினோத திருவிழா
நத்தம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோவில் விழாவில் 50 கிடாக்கள் பலியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்கார சாமிக்கு 50 ஆடுகள் பலியிடப்பட்டு, அங்கேயே சமைத்து பக்தர்களுக்கு படையலிடப்பட்டது. ஆடுகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஈரல் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டையும் சமையலுக்கு பயன்படுத்தாமல் சாமிக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபட்டனர். பாரம்பரியமாக நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நத்தம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story