திண்டுக்கல் அருகே திடீரென அதிர்ந்த பூமி... குலுங்கிய வீடுகள் - அச்சத்தில் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கர வெடி சத்தமும், நில அதிர்வும் ஏற்பட்டது. இதனால், வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். நாகைய கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறையின் சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. பல இடங்களில் மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது. பள்ளி இடைவேளை நேரம் என்பதால், மாணவர்கள் வெளியே இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
Next Story