இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. ``ஒன்னு வாழனும் இல்ல சாகனும்''
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் 8 மாதங்களாக அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாலட்சுமி என்பவரை அவருடைய கணவர் மணி முருகனின் குடும்பத்தினர் 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐந்து முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண்ணின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story