மாதந்தோறும் ஆணுக்கு வரும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர், தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ளார். ஆனால் அரசு அவரின் வங்கிக் கணக்கின் கடைசி எண் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதால், கிருஷ்ணன் என்பவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த 14 மாதங்களாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வரவாகியுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், வேடசந்தூர் வட்டாட்சியர், பழனி கோட்டாட்சியர் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முருகேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.
Next Story