"சடலத்துடன் போராடுவோம்" - கடும் கோவத்தில் மக்கள் விடுத்த எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரசின்னம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊரின் வடக்குப் பகுதியில் இவர்கள் சுடுகாட்டைப் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் பட்டா இடம் எனக் கூறி வேலி வைத்து அடைத்ததாக தெரிகிறது. பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சாலையில் சடலத்துடன் போராடுவோம் என எச்சரித்துள்ளனர்.
Next Story