திடீரென பற்றி எரிந்த நாவல் மரம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான மரம் என்பதால் மரத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து எந்நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில், நாவல் மரத்தின் உச்சிப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமடைந்த மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்