சாலையில் ஆங்காங்கே போதையில் கிடந்த ஆசாமிகள் “முகம் சுளிக்க வைக்கும் காட்சி“- திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பல்வேறு இடங்களில் குடிபோதையில் சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டது முகம்சுழிக்க வைத்தது. பேருந்து நிலையத்தில் நடுரோட்டில் போதை ஆசாமி ஒருவர், எழுந்து நடக்க முடியாமல், படுத்து உருண்டது அங்கிருந்தவர்களை வெறுப்படைய வைத்தது. இதேபோல, பேருந்து நிலையம் அருகே இரண்டு இடங்களில் சாலையில் படுத்து கலாட்டாவில் ஈருபட்டவர்களை போலீசார் பிடித்து விரட்டினர். ஆத்துமேடு பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்