இது பொய் வழக்கு..?கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று கூடிய வழக்கறிஞர்கள்..முற்றிய போராட்டம்..

x

வடமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வரதராஜன் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது... இது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்கு என்றும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும், வழக்குப்பதிவு செய்த சார்பு ஆய்வாளர் சித்திக்கை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரை ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதையடுத்து போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயிலை அடைத்தனர். அதை அடைக்க விடாமல் தடுக்க முயன்ற வழக்கறிஞர்கள் அங்கேயே அமர்ந்து காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்