`அரசு பள்ளிகளில்'... RTIல் வெளிவந்த ஷாக் செய்தி... பெற்றோருக்கு ஷாக் -என்ன நடக்கிறது திண்டுக்கலில்?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், விளையாட்டு மைதானமும், உடற்கல்வி ஆசியர்களும் இல்லையென பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக..
சர்வதேச அளவில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா... மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் என விளையாட்டிற்கென தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது..
இந்த சூழலில்தான், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ரத்தீஷ் பாண்டியனின் இந்த குற்றச்சாட்டு...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 170 அரசு பள்ளிகளில், 93 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லையென்றும், 30 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லையெனவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார்...
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?, உடற்பயிற்சி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற கேள்வி முன்வைத்து ஆர்.டி.ஐக்கு கடிதம் அனுப்பி பதில் பெற்று, சமூக ஆர்வலர் வலியுறுத்திருக்கும் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்..