குமுளி மலைப்பாதையில் திண்டுக்கல் பேருந்து விபத்து..
தமிழக கேரளா எல்லையான குமுளி மலைச்சாலையில் அரசு பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து குமுளி மலைச்சாலையில் மாதா கோவில் அருகே வளைவில் திரும்பும்போது பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அதனை சரி செய்யும் பணியில் குமுளி காவல்துறையினர் ஈடுபட்டனர்.
Next Story
