"அரசு அதிகாரியா இல்லனா வேற மாதிரி பண்ணிருப்பேன்" -பெண்ணுக்கு கொலை மிரட்டல்.. தம்பி பரபரப்பு பேட்டி

x

மொரப்பூரை அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாரதி என்பவருக்கும் வழி சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரூர் வட்டாச்சியர் உத்தரவுப்படி வழிப்பாதையை அளந்து முட்டுக்கல் வைத்து சென்ற நிலையில், அதை பாரதி அகற்றி விட்டு வழிப்பாதை நிலத்தை அளக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து சர்வேயர் விஜயன் நிலத்தை அளக்கச் சென்றபோது, சொக்கலிங்கம் மற்றும் அவருடைய மகன் பிரபாகரன், மகள்கள் பிரவீணா, விஜயசாந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலரோ, வட்டாச்சியரோ இல்லாமல் நிலத்தை அளக்க கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு வேறு யாரும் வரமாட்டார்கள் என்று கூறிய சர்வேயர் விஜயன், பிரவீணாவை கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய், தந்தையருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொக்கலிங்கத்தின் மகனும், ராணுவ வீரருமான பிரபாகரன் கூறியுளார்.


Next Story

மேலும் செய்திகள்