கழுத்தை நெரித்த கடன்.. காமுகன் வெறியாட்டம்..மூதாட்டி கொலை வழக்கில் திடுக் திருப்பம் - பகீர் பின்னணி

x

கழுத்தை நெரித்த கடன்.. காமுகன் வெறியாட்டம்..மூதாட்டி கொலை வழக்கில் திடுக் திருப்பம் - பகீர் பின்னணி

கடன் தொல்லையால அவதிப்பட்டு வந்த டைல்ஸ் ஒட்டுற தொழிலாளி திருட போன இடத்துல நகையை கொள்ளை அடிச்சது மட்டும் இல்லாம.. அங்கிருந்த மூதாட்டி மேல வெறியாட்டம் ஆடியிருக்காரு.. கொள்ளையானக போனவர் கொலைகாரனனா கதையின் பகீர் பின்னணி இது...

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது பெரிய தோட்டம் புதூர் கிராமம்...

சம்பவத்தன்று ஊரில் இருந்தவர்கள் வேலைக்கு செல்லாமால் அந்த வீட்டின் முன் கூடியிருந்தனர்.. காரணம் ஒரு கொடூர கொலை.

கொல்லப்பட்ட மூதாட்டிக்கு 60 வயதாகிறது. இவரது கணவர் பிரபு. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. 4 ஏக்கர் நிலம் உள்ளதால் பிரபு ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். பெரும்பாலும் பிரபு விவசாய நிலத்திலேயே தங்கி காவல்காப்பது வழக்கம். வீட்டில் மனைவி மட்டும் தனிமையில் இருந்துள்ளார்.

சனிக்கிழமை காலை வெகு நேரம் ஆகியும் மனைவி சாப்பாடு கொண்டு வராததால் பிரபு வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் உதவியுடன் விரைந்து வந்த போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியிருக்கிறார்கள்.. அதில் தான் வீட்டு பீரோவில் வைத்திருந்த 6 சவரன் இரட்டை வட செயினும், மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தாலிக்கொடியும், 5 பவுன் செயினும் என மொத்தம் 13 சவரன் நகை 6000 ரூபாய் ரொக்க பணமும் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது..

ஆதாயத்திற்காக தான் இந்த கொலை நடந்திருக்கிறது.. அதுவும் மூதாட்டியை பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த அசம்பாவிதத்தை செய்திருக்க வேண்டும் என போலீசார் ஆணித்தரமாக நம்பியிருக்கிறார்கள். இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அதில் அறிவழகன் என்பவரும் ஒருவர்.

எல்லோரிடமும் விசாரித்ததை போலவே தான் அறிவழகனிடமும் போலீசார் விசாரித்திருக்கிறார்கள். ஆனால் அவரின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்திருக்கிறது. இதனால் போலீசாரின் சந்தேகம் முழுவதும் அவர் பக்கமே திரும்பியிருக்கிறது. அடுத்தடுத்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருக்கிறது.

38 வயதான அறிவழகன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால் அறிவழகன் மூதாட்டியிடம் நன்றாக பேசி பழகி வந்திருக்கிறார். பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் மூதாட்டியிடம் கடன் வாங்கிய அறிவழகன், அதை உரிய நேரத்தில் செலுத்தி வந்திருக்கிறார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக அறிவழகன் அதீத கடன் சுமையால் அவதி பட்டிருக்கிறார். அதோடு சமீபத்தில் அவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்திருக்கிறது. ஊருக்குள் அவர் வாங்கி வைத்திருக்கும் கடன் கிட்டதட்ட10 லட்சத்தை எட்டியிருக்கிறது. சம்பாதித்து கடனை அடைக்க வழியில்லை என்பதை உணர்ந்த அறிவழகன் குறுக்கு வழியை யோசித்திருக்கிறார். அதில் தான் மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடிக்கும் யோசனை முளைத்திருக்கிறது.

சம்பவத்தன்று இரவு வயலில் தங்கியிருந்த கணவனுக்கு மூதாட்டி சாப்பாடு கொடுக்க சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த அறிவழகன் கட்டிலுக்கு அடியில் மறைந்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்