முதலில் படிப்பு, அடுத்து உயிர்... கனவுகளுடன் இருந்த சிறுமியை சிதைத்த `சாலை'... நேரக்கூடாத கொடுமை...

x

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு மலை கிராமம், பிற கிராமங்களுடன் தொடர்பில்லாமல் 13 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பாம்பு கடித்த நிலையில், சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சிறுமியை டோலியில் வைத்து கிராம மக்கள் தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிப்பதற்காக, சிறுமியை ஆட்டோவில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். சாலை வசதி இல்லாததால், கடந்த ஆண்டுடன் பள்ளி படிப்பை நிறுத்திய சிறுமி, தற்போது அதே பிரச்சினையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்