``இத நம்பிதான் இருந்தோம்.. எல்லாமே போயிடுச்சு'' - கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்

x

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு சேதமடைந்து விட்டது. அரூர் வட்டாரத்தில் 6 ஆயிரத்து 655 ஹெக்டேரிலும், மொரப்பூர் வட்டாரத்தில் 388 ஹெக்டேரிலும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையில், மரவள்ளி கிழங்கு வெள்ளத்தில் போய் விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தங்களின் நிலைமையைப் பார்த்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்