கலெக்டர் வீட்டை மோதிய கண்டெய்னர் லாரி - தர்மபுரியில் பரபரப்பு சம்பவம் | Collector | Dharmapuri

x

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தடங்கம் பகுதியில் ஆட்சியர் இல்லம் அமைந்துள்ள நிலையில் ஜார்கண்டைச் சேர்ந்த மன்சூர் அம்மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் புதிய கார்களை ஏற்றிக் கொண்டு தர்மபுரியில் உள்ள கார் ஷோரூமில் இறக்குவதற்காக வந்துள்ளார்.. அப்போது கார் ஷோரூமை விட்டு அவர் தாண்டிப் போய் விட்ட நிலையில், மீண்டும் வண்டியைத் திருப்புவதற்காக பின்னால் லாரியை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பராத விதமாக ஆட்சியர் இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது மோதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் முன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்