கடலுக்குள் சென்று போட்டோஷூட்..தனுஷ்கோடியில் அதிர்ச்சி | Dhanushkodi
தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல், சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று செல்ஃபி எடுப்பதை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், ஆபத்தான முறையில் கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுப்பது, விளையாடி மகிழ்வது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். கடல் சீற்றம் போன்ற நேரங்களில் இது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், சுற்றுலா பயணிகள் கடலுக்குள் செல்வதை தடுக்க வேண்டும் என, காவல்துறையை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story