ருசிக்க வைக்கும் சம்மர் சமையல்...

x

சாய்ங்கால நேரத்துல நம்மளோட குட்டி பசிய சமாளிக்குறதுக்கு சுட சுட போன்டா பஜ்ஜி சாப்புட்ற மாதிரி... கொரிய மக்கள் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்ஸா விரும்பி சாப்பிட்றது தான் இந்த Korean Potato Pancake... ரெசிபியோட போருல கேக்குனு இருக்குறதுனால சமைக்ககொஞ்சம் செலவாகுமோனு நெனச்சுடாதீங்க.. சிம்பில்லா நம்ம வீட்டுல இருக்க நாளு பொருளை வச்சே... ஈசியா சமைச்சுடலாம்...

சரி... சரி.... ஊரு பெறுமை... சோறு பெருமை பேசுனதெல்லாம போதும்.... சட்டு புட்டு சமைக்க ஆரம்பிங்கனு சொல்லுற உங்க மைன்ட் வாய்ஸ்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்.... அதுனால அடுப்ப பத்த வச்சு சமைக்க ஆரம்பிக்கலாம் வாங்க...Korean Potato Pancake சமைக்க தேவையான பொருட்கள்... உருளை கிழங்கு, எண்ணெய், உப்பு, மிளகு தூள், கார்ன்பிளார் மாவு, சோயா சாஸ், வினிகர், நாட்டு சர்க்கரை, பச்சை மிளகாய்... அம்புட்டுத்தான்....

சமையலின் முதல்கட்டமா ரெண்டு முரட்டு உருளை கிழங்க ரெண்டு எடுத்து... அதோட தோலை நீக்கிடுங்க... நெக்ஸ்ட்டு அதை நல்லா வாஷ் பண்ணி... பீலர்ர எடுத்து நூடுல்ஸ் மாதிரி நீளம் நீளமா சீவிக்கனும்... சீவி முடிச்சதும் அதை தனியா ஒரு பாத்திரத்துல போட்டு அதுல கொஞ்சம் தண்ணிய ஊத்தி ஊர வச்சுக்கோங்க...நெக்ஸ்ட்டு வேற ஒரு பாத்திரத்துல... ரெண்டு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் வினிகர், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரை இந்த மூனையும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க... அடுத்து அதுல ஒரு நீளமான பச்சை மிளகாய பொடி பொடியா நறுக்கி போட்டோம்னா... நம்ம ரெசிபிக்கான சாஸ் ரெடியாகிடும்..


Next Story

மேலும் செய்திகள்