தமிழக விவசாயி மகளை அலேக்காக தூக்கிய டெல்லி... பெரும் கவுரவம்... குவியும் வாழ்த்துக்கள்

x

டெல்லியில் வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தில் ஒரே மாணவியாக, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாட்டாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - தனலெட்சுமி தம்பதியின் மகள் சாராஸ்ரீ, சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். திருச்சி தேசிய கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர்,

டெல்லியில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்திற்கும் மாணவி சாராஸ்ரீ மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக டெல்லிக்கு புறப்பட்ட மாணவியை, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம மக்கள் வாழ்த்து வழியனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்