சிலிண்டர் வெடித்து விபத்து - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

x
  • தென்காசியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில், குழந்தைகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தென்காசி அடுத்த சக்தி நகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் ஜூலி என்பவரும், அவரது 2 குழந்தைகளும் படுகாயமடைந்தனர். வழக்கு தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜூலி என்பவர் குழந்தைகளுடன் சேர்ந்து சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜூலி மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்