"150 கிமீ-ல் புயல் வரும் போது எச்சரிக்கை.. இது என்ன ஜோசிய கணிப்பா?" - கனிமொழி காட்டம்
மத்திய அரசு தரும் இயற்கை பேரிடர் குறித்த வானிலை எச்சரிக்கைகள் ஜோதிட கணிப்புகளை போல் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய அவர்,
புயல் 150 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும்போது மட்டும் மத்திய அரசால் அது குறித்த தெளிவான தகவலை தர முடிவதாக தெரிவித்தார்.
ஒரு நாளுக்கு முன்பாக கொடுக்கும் எச்சரிக்கையால் மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Next Story