தெரியாம கூட இந்த லிங்க்கை க்ளிக் பண்ணிடாதீங்க - உஷார் மக்களே.. வந்தது எச்சரிக்கை
போலி சலுகை, ரீசார்ஜ் டீல் உள்ளிட்ட மோசடி, பண்டிகை காலங்களில் அதிகமாக நடப்பதாக கூறியுள்ள போலீசார், பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இதற்காக இணைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி, மூன்று மாதத்திற்கான ரீசார்ஜ் தொகையாக 7 ஆயிரத்து 489 அனுப்பப்பட்டுள்ளதாக, பொதுமக்களுக்கு மோசடி குறுஞ்செய்திகள் வருவதை சைபர் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த இணைப்புகளை கிளிக் செய்ய வைத்து, நிதி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடலாம் என எச்சரித்துள்ள போலீசார், 1.9.3.0. என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, சைபர் கிரைம் இணையதளத்திலோ புகார் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
Next Story