இப்படி ஒரு விபத்தா..? ஓரமாய் சென்ற 3 பேரை தேடிவந்த ஆபத்து - நம்பவே முடியாத திக்திக் வீடியோ
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி இருச்சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து மின்னல் வேகத்தில் இறங்கி வளைவில் திரும்பிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் சாலையில் நுழைந்தது. அப்போது எள்ளேரி பகுதியை சேர்ந்த வீரபாண்டியன், சேகர், சின்னதுரை ஆகியோர் சென்ற பைக் மீது அந்த கார் மோதியதில், மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காரை ஓட்டிவந்த சிதம்பரத்தை சேர்ந்த சந்தீப் குமாரை போலீசார் கைது செய்தனர்.
Next Story