ஒரே நொடியில் மொத்தமாய் சிதைந்த 15 ஆண்டு காலம் சிந்திய வேர்வை..மரங்களை அழித்து கதறி அழுத விவசாயி

x

ஒரே நொடியில் மொத்தமாய் சிதைந்த 15 ஆண்டு காலம் சிந்திய வேர்வை..மரங்களை அழித்து கதறி அழுத விவசாயி - மனதை உலுக்கும் காட்சிகள்

கடலூர் மாவட்டத்தில் முந்திரி பருப்புக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கண்ணீருடன் மரங்களை வெட்டி அகற்றி வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

முந்திரி சாகுபடிக்கு பெயர்போன கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரி மரங்களை விவசாயிகள் நட்டு வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து முந்திரி பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, பண்ருட்டி முந்திரி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விலை தாறுமாறாக குறைந்ததால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் மரங்களை வெட்டிவிட்டு மாற்று பயிருக்கு மாறி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த இருசாலக்குப்பம், கோட்டேரி, நடியப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்

15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வளர்த்து வந்த மரங்களை விவசாயிகள் கண்ணீருடன் வெட்டி வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. முந்திரி பருப்பு மட்டுமின்றி, முந்திரி பழச்சாறில் இருந்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய அரசு முன்வருவதுடன், ஊக்கத்தொகை வழங்கி முந்திரி விவசாயிகளை காக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்