முட்புதர்களை சுத்தம் செய்ததும் தெரிந்த சோழர் கால பொக்கிஷம்.. உடனே இறங்கிய குழு

x

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் சிதிலமடைந்து உள்ளது. அதனை புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்து, முட் புதர்களை அகற்றிய போது கோயில் சுவற்றில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் உள்ளதை பார்த்து, விழுப்புரம் வரலாற்று கல்வெட்டு மற்றும் ஆராய்ச்சி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லூரி வரலாற்று ஆராய்ச்சி ஆய்வாளர்கள் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுக்களோடு இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பயன்படுத்திய கல்வெட்டு இருந்த‌தும், தொல்லியல் துறையில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். மேற்கு பார்த்தவாறு உள்ள சிவன் சிவலிங்கம், ஆறு முகத்தில் காட்சியளிக்கும் முருகன், கைகளில் சங்கு மற்றும் சக்கரம் வைத்துள்ள விநாயகர் சிலைகள் உள்ளன. சிவலிங்கத்திற்கு அருள்மிகு ஸ்ரீபிரம்மீஸ்வரர் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்தால், வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்