நண்பன் மகள் என்றும் பாராமல் நிகழ்த்திய கொடூரம்.. 3 பேருக்கு மரண தண்டனை | Cuddalore

x

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நகரபாடி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், கணவர் இறந்த சூழலில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஞானகுரு என்ற இளைஞர், வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறியும் இதுவரை அவரை கண்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் ஞானகுருவை போலிசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்