வரிசெலுத்தாத வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி - பரபரப்பு காட்சிகள்

x

கடலூரில் வீட்டு வரி கொடுக்காத காரணத்தால், ஜேசிபியை வைத்து வீட்டு வாசலில் பள்ளம் தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வரதராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், வீட்டு வரி வசூலிக்க மாநகராட்சி ஊழியர்கள் வருகை தந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரிடம் வரியை கேட்கும்படி செந்தில்குமார் தெரித்துள்ளார். ஆத்திரமடைந்த மாநகராட்சி ஊழியர்கள் வீட்டு வாசலின் முன் ஜேசிபி மூலமாக பள்ளம் தோண்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநாகராட்சி ஊழியர்களின் மீது செந்தில் குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்