தமிழகத்தை பரபரப்பாக்கிய சவ ஊர்வலம் -பிணத்தை தூக்கியவர்கள் உயிருக்கு போராடிய திக்திக் ஷாக்கிங் வீடியோ

x

தமிழகத்தை பரபரப்பாக்கிய சவ ஊர்வலம் -

பிணத்தை தூக்கியவர்கள் உயிருக்கு போராடிய திக்திக் சம்பவம் - நடுங்கவைக்கும் ஷாக்கிங் வீடியோ

வாய்க்காலை கடக்க பாலம் இல்லாததால், கால்வாயில் இறங்கி சவ ஊர்வலம் சென்ற கிராம மக்கள், சடலத்துடன் சேர்ந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சவ ஊர்வலத்தில் சடலத்துடன் கால்வாயை கடக்கும்போதுதான் மனதை ரணமாக்கும் இந்த பேரவலம் அரங்கேறி இருக்கிறது..

போதிய பால வசதி இல்லாததால், கால்வாயில் இறங்கி சடலத்தை தூக்கி சென்ற கிராமத்தார், கழுத்தளவு தண்ணீரில் நிலைதடுமாறி மூழ்கிய நிலையில், தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் அரங்கேறி இருக்கும் இந்த அவலத்தில், கிராமத்தில் ஒருவர் இறந்த துக்கத்தை விட அவரை நல்லடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கலே பெரும் துயரம் என வேதனை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள் ...

கலியம்பெருமாள் என்ற முதியவர் வயது மூப்பினால் உடல் நலம் குன்றி உயிரிழந்த நிலையில், அவரை தங்களின் உயிரை பணையம் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர் கிராம மக்கள்..

இந்த விபரீதத்தை தாங்கள் சந்திப்பது முதல்முறை இல்லையெனவும், கிராமத்தில் யாராவது இறந்தால் வடக்குராஜன் கால்வாயை கடந்து மறுகரையில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்யும் சூழலில்... இது தொடர்கதையாகி வருவதாக ஆதங்கம் தெரிவித்திருக்கின்றனர்..

இதனால், கால்வாயை கடக்க பாலம் அமைத்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்..

மக்களின் நீண்ட கால சொல்லொன்னா துயரம் இந்த வீடியோ காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்...


Next Story

மேலும் செய்திகள்