மண்ணிற்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி படம் எடுத்த நல்ல பாம்பு - அலறி ஓடிய மாணவர்கள்
கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மைதானத்தில் மண்ணுக்கடியில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிய நல்ல பாம்பைக் கண்டு மாணவ மாணவிகள் அலறியடித்து ஓடினர்... தகவலறிந்து வந்த வன ஆர்வலர் செல்லா பள்ளம் தோண்டி பாம்பை பத்திரமாக மீட்டார்... 6 அடி நீள நல்ல பாம்பு எலி பொந்துக்குள் சென்று எலியை விழுங்கி விட்டு வெளியே வரும்போது மாட்டிக் கொண்ட நிலையில் செல்லா அதை பிடித்துச் சென்றதும் மாணவ மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.
Next Story