தனியார் பேருந்துகள் ஸ்டிரைக் - வெளியே செல்லமுடியா அவதியில் மக்கள்

x

பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க சாவடி வழியே 50 முறை ஒரு தனியார் பேருந்து சென்று வந்தால் 14 ஆயிரத்து 90 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க கோரியும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சிதம்பரம் - கடலூர் மார்க்கத்தில் 38 தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லக் கூடிய பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்