பெண்ணை தாக்கிய போலீஸ் SI - வலி தாங்க முடியாமல் அலறி துடித்த பரபரப்பு காட்சி

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பெண் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறி, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாசி மகத்தையொட்டி, கீழச்சாவடி கிராம மக்கள் சுவாமி ஊர்வலம் சென்ற போது, காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் மீது மர்ம நபர்கள் கல் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மற்றும் பிற காவலர்கள் கீழச்சாவடி இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் பெண் ஒருவரின் கையில் பலத்த அடி விழுந்த நிலையில், வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் குதித்து, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்