பொறுத்து பொறுத்து பொங்கியெழுந்த மேயர்... நேரில் வந்தவருக்கு ஷாக் - கான்ட்ராக்டர்களை கதறவிட்ட சம்பவம்

x

கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்கள் மாயமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பொறுத்து பொறுத்து பொங்கியெழுந்த மேயர்... நேரில் வந்தவருக்கு ஷாக் - அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள் - கான்ட்ராக்டர்களை கதறவிட்ட சம்பவம்

குப்பைகளை அள்ளவில்லை என்று ஏராளமான புகார்கள் வருகின்றன... கவுன்சிலர்களில் ஆரம்பித்து பொதுமக்கள் வரை தன்னை தொடர்பு கொள்வதாக ஒப்பந்ததாரர்களிடம் பொங்கி எழுந்த மேயர்..

மாநகராட்சியை சுத்தம் செய்வதற்காக வாங்கப்பட்ட 130 வாகனங்களில் 70 மட்டுமே உள்ளன.. அதிலும் 20 வாகனங்கள் ரிப்பேராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீதம் உள்ள வாகனங்கள் எங்கே என சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயரால் அதிர்ந்து போன அதிகாரிகள்...

கடலூர் மாவட்டம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மாநகராட்சிக்கான தூய்மை செய்யும் பணிகளை சிட்டி க்ளீன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து சுத்தம் செய்து வருகிறது. இந்த நிலையில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என தொடர்ச்சியாக வந்த புகாரினை தொடர்ந்து அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் வாகனங்களுடன் ஆஜராகுமாறு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் புதிதாகப் பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் அனு ஆகியோர் உத்தரவிட்டனர்.

அப்போது மேயர் மேற்கொண்ட ஆய்வின் போது அங்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் காயலான் கடைக்கு கொண்டு செல்லப்படும் வாகனங்கள் போன்று இருந்தை பார்த்து மேயர் மற்றும் ஆணையர் அதிர்ச்சி அடைந்தனர்.

பேட்டரி வாகனங்களில் அதற்கான ஒட்டுநர்கள் இல்லாததால், வயதான தூய்மை பணியாளர்களே அந்த வாகனங்களை ஒட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பல வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் பரிதாபமாக காட்சியளித்தன. மேலும் வயதான பணியாளர்களுக்கு லீவு கொடுப்பதில்லை எனவும் புகார் வருவதாக மேயர் தெரிவித்தார்.

குப்பைகள் ஒழுங்காக அள்ளப்படுவதில்லை, சாக்கடைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்க தொடங்கினார். தெரு தெருவாக ஆய்வு மேற்கொள்ளுங்கள் ...நீங்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றால் நான் வருவேன் என எச்சரித்தார் மேயர்..

மாநகராட்சி மேயரே சரமாரியான அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை முன் வைத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்