அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி தகராறு செய்த ஓட்டுநர் - ஷாக்கிங் வீடியோ
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரியன்பேட்டை கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரான ஜோதி என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரகு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதியின் தந்தை சுப்பிரமணியனுக்கும், ரகு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெத்தாங்குப்பம் வழியாக பேருந்தை ஓட்டி வந்த ஜோதி திடீரென பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் கையில் அரிவாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story