மின்வேலி அமைத்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாப பலி
பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த மின்வேலி அமைத்த தொழிலாளி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பனப்பாக்கம் பகுதியில், சுகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த மின்வேலி அமைக்கும் பணியில் பெருமாள், சக்திவேல் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு 2.30 மணி அளவில் மின்வேலி அமைக்கப்பட்ட இடத்தில் காட்டுப்பன்றிகள் சிக்கியுள்ளதா என பார்க்க சென்ற போது பெருமாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்த பெருமாளின் உறவினர்கள், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உரிய நிவாரணம் வழங்க கோரியும் போலீசாரை முற்றுகையிட்டு புகாரளித்தனர்.
Next Story