பள்ளிக்கு அருகே உலா வரும் முதலை - அதிர்ச்சி வீடியோ.. பீதியில் பெற்றோர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிசாவடி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடி எதிர்புறத்தில் உள்ள குளத்தில் ராட்சத முதலை இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு இடைவேளை சமயத்தில் இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதிக்கு மாணவர்கள் அடிக்கடி செல்வதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனே மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் குளத்தில் உலா வரும் ராட்சச முதலையை பிடித்து செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story