கலெக்டர் ஆபீஸ் உள்ளே புகுந்து அடித்து உடைத்த மர்ம நபர்கள்.. கடலூரில் அதிர்ச்சி

x

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த ஆட்சியரின் பெயர் பலகைகளை அடித்து உடைத்துள்ளனர். மேலும் ஆட்சியரின் நேர்முக உதவி உதவியாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளரின் பெயர் பலகைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதேபோல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரங்க துறை அதிகாரியின் அரசு வாகனத்தின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு காவலர் விடுமுறையில் சென்ற நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்