ரத்தம் சொட்ட, சொட்ட போலீசாரிடம் ஓடிவந்து ஹிந்தியில் கதறிய வடமாநில இளைஞர்கள்- திகைத்து நின்ற போலீசார்

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவிந்தசாமி நகர் பகுதியில் வடமாநில இளைஞர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பானி பூரி விற்கும் ஒரு வட மாநில இளைஞர் அப்பகுதியில் உள்ள உள்ளூர் தமிழக இளைஞர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஊருக்குள் வந்தனர். அவர்கள் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ரத்தம் சொட்ட, சொட்ட இந்தியில் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று புரியாமல் போலீசார் திகைத்து நின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்த 3 பேரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இளைஞர்கள் போலீசாரிடம் ரத்தம், ரத்தம் சொட்ட சொட்ட புகாரளித்த வீடியோ வைரலாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்