சிங்கப்பூர் சென்ற தமிழக பெண்.. தோட்டத்தில் அள்ள அள்ள தங்கம்.. மிரண்டு போன போலீஸ்

x

கடலூர் மாவட்டம், வடலூரில் ஆளில்லா வீட்டில் திருடி, தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த 53 பவுன் நகைகளை, குற்றவாளிகளை அழைத்துச் சென்று போலீசார் மீட்டனர்.

வடலூர் என்எல்சி ஆபீஸர் நகரைச் சேர்ந்த பார்வதி, தனது குடும்பத்தினரை சந்திக்க கடந்த மாதம் 20-ஆம் தேதி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள், அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள், பார்வதிக்குத் தகவல் கொடுத்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி, சிங்கப்பூரில் இருந்து வந்து, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 56 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி, பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடலூர் போலீசார், 2 தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகள் 4 பேரை தேடி வந்தனர். வேறொரு திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் குற்றவாளிகள் இருப்பதை அறிந்த போலீசார், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, ரஞ்சித் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 53 பவுன் நகைகளையும், மற்ற பொருட்களையும் போலீசார் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்