எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகள்.. திரளான பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் நான்காம் நாள் விழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் எழந்தருளினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவானது, கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நான்காவது நாள் உற்சவமான தெரு வடைச்சான் விழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள், சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். நான்கு வீதிகளிளும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உலாவந்த நிலையில், திரளான பக்தர்கள் சுவாமிகளை வணங்கிச் சென்றனர்.
Next Story