நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா - சிவ வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் வேத மந்திரம், சிவ வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 150 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story