மீன் வலையில் சிக்கிய முதலை குட்டி - மீட்ட வனத்துறையினர் | Thanjavur | Crocodile | Thanthi TV

x

தஞ்சாவூரில் மீனவர் வலையில் சிக்கிய முதலை குட்டி மீட்கப்பட்டது. பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மீனவர் வலைவீசியபோது, முதலைக் குட்டி வலையில் சிக்கியது. இதனையடுத்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலைக் குட்டியை மீட்டு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து, அணைக்கரை பகுதியில் உள்ள முதலைகள் பாதுகாப்பு மையத்தில் முதலைக் குட்டியை வனத்துறையினர் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்